முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்குள் வெடிகுண்டுச் சத்தம்? அச்சத்தில் பொதுமக்கள்

Report Print Tamilini in அரசியல்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அவ்வப்போது இரவு நேரங்களில் வெடிகுண்டு சத்தம் கேட்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கேட்ட குண்டு வெடிப்புச் சத்தம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

குறிப்பாக நேற்றிரவு 8.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டுசத்தம் ஒன்று கேட்டுள்ளதாக முன்னர் பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றிரவு 9.00 மணிக்க மேல் பல தடவைகள் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இரவு நேரங்களில் இவ்வாறு இரண்டாவது நாளாக இடம்பெற்ற வெடிப்பு சத்தங்களை கேட்கக்கூடியதாகவுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுகின்றார்களா அல்லது வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றனவா என்னும் குழுப்பத்தில பொதுமக்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் எதுவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.