சோம்பேறிகளாக மாறிய இலங்கை அமைச்சர்கள்! கடுப்பான ஜனாதிபதி மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

7.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாகிய சந்தர்ப்பத்தில் 5 அமைச்சர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.

இதன் காரணமாக தூர பிரதேசத்ததில் உள்ள அமைச்சர்கள் காலை வேளையில் கலந்து கொள்வது சிரமம் என்பதனை கருத்திற்கொண்டு அமைச்சரவை கூட்டத்தை காலை 8.30 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

“தற்போது நான் அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு அதிகாலையிலேயே எழுப்ப பழக்கிவிடுகிறேன். முன்பு காலை 9.30 மணிக்கு அமைச்சரவை ஆரம்பமாகியது.

எனினும் தற்போது 7.30 மணிக்கு ஆரம்பமாகியது. அதன் பின்னர் 5 அல்லது 6 பேர் மாத்திரமே கலக்து கொள்கின்றனர். பகலாகும் வரை உறங்கும் அமைச்சர்கள் யார் என தற்போது தெரிகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் காலை வேளையில் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும் 7.30 மணிக்கு அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்வது சிரமமாக உள்ளதென பலர் விமர்சித்துள்ளனர்.