அடுத்த ஜனாதிபதி யார்? இலங்கையின் முன்னணி ஜோதிடரை நாடியுள்ள அரசியல்வாதிகள்

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் வேட்பாளர் பற்றி அறிந்து கொள்வதற்காக அதிகளவான அரசியல்வாதிகள் ஜோதிடர்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஜாதகங்களை எடுத்துக் கொண்டு இவ்வாறு அரசியல்வாதிகள் ஜோதிடர்களின் காரியாலயங்கள், வீடுகளில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் முன்னணி ஜோதிடர் ஒருவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் மட்டுமன்றி சில பிரபல வர்த்தகர்களும் குறித்த நபரின் கிரக நிலை எப்படி உள்ளது என பார்த்து சொல்லுங்கள் என கோரி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய வேட்பாளருக்கு பணம் செலவிடுவதே இந்த நபர்களின் நோக்கமாக அமைந்துள்ளது.

இந்த நோக்கத்தில் ஜோதிடம் பார்க்க வரும் நபர்களினால் தமக்கு பெரும் தொல்லை ஏற்பட்டுள்ளது என குறித்த ஜோதிடர் விசனம் வெளியிட்டுள்ளார்.