கோத்தபாய ஜனாதிபதியானால்! த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் என்ன கூறுகிறார்?

Report Print Yathu in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்வார் என்று எதிர்வு கூற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கூறிய போது மக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதேபோல் எதிர்வரும் தேர்தலிலும் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

இதுவரை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனான சந்திப்பும் இடம்பெறவில்லை. அவர்கள் பேச அழைத்தால் தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பேசுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானால் உங்கள் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது,

யார் வெல்வார் என்று எதிர்வு கூற முடியாது. ஆனால் யார் வந்தாலும் அவர்களுடன் பேச வேண்டிய நிலை உள்ளது. நாம் பேசுவோம் எனவும் கூறியுள்ளார்.

Latest Offers