பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றையதினம் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன் இணைந்து பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பலர் தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தனர்.
மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீசுமங்கல தேரரிடம் அவர் அசீர்வாதம் பெற்றுக்கொண்டதோடு பின்னா் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடமும் கோத்தபாய ராஜபக்ச ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.