விநாயகர் ஆலயத்தில் கோத்தா!

Report Print Jeslin Jeslin in அரசியல்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கண்டி கடுகெல விநாயகர் ஆலயத்திற்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாடளாவிய ரீதியிலுள்ள மதத் தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் கண்டிக்குச் சென்ற அவர் வழிபாட்டில் ஈடுபட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.