2020இல் சஜித் வருகின்றார்! அடுத்தது மாத்தறை

Report Print Jeslin Jeslin in அரசியல்

2020 இல் சஜித் வருகின்றார் என்ற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று 23ஆம் திகதி மாத்தறையில இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து குறித்த பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஐ.தே.கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த பொதுக் கூட்டத் தொடர் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் கடந்த 12ஆம் திகதி பதுளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.