யார் ஜனாதிபதி வேட்பாளர்? ஐ.தே.கவின் முக்கியஸ்தர் அளித்துள்ள பதில்

Report Print Jeslin Jeslin in அரசியல்

வெகு விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பார். கட்சியில் அதிக பெரும்பான்மை ஆதரவு உள்ள நபர் குறித்தே அக்கறை செலுத்தி வருகின்றோம் என ஐ.தே.கவின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்ற கட்சியின் ஏகோபித்த நிலைப்பாடாக உள்ள நிலையில் கட்சியின் தலைமைத்துவம் இன்னமும் எந்தவித கருத்துக்களும் முன்வைக்கவில்லை.

இதுதொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் ஏகமனதான நிலைப்பாடுகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் நிலைப்பாட்டை புறக்கணித்து மாற்று அணியினை உருவாக்க இடமளிக்க முடியாது என கபீர் ஹாசீம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.