பொது பயன்பாட்டுக்காக சுமார் 2000 சொகுசு பேரூந்துகளை தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும் நிதியமைச்சின் அதிகாரிகள் அதில் அதிக அக்கறை செலுத்தாமல் உள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் தாம் அரசியல் ரீதியில் நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,
குறித்த பேரூந்துகளை தருவிக்குமாறு கடந்த ஒன்றரை மாத காலமாக தாம் அமைச்சரவையில் வலியுறுத்தல் விடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
நிதியமைச்சின் அதிகாரிகள் இவ்வாறு நடந்துக்கொள்ளும்போது ஏன் தொடர்ந்தும் அரசியலில் இருக்கவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.