இதுவே இறுதி தருணம்! கோத்தபாயவிற்கு அறிவுரை கூறிய தேரர்

Report Print Murali Murali in அரசியல்

“இதுவே இறுதி வாய்ப்பு, இந்த வாய்ப்பினை தவறவிடக் கூடாது” என கட்டம்பே ராஜபோவனராம விகாரையின் தலைமை விகாரதிபதி கப்பெட்டியகொட சிரிவிமலா தேரோ கோத்தபாய ராஜபக்சவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் போது கண்டி தலதா மாளிகை, கட்டுகஸ்தோட்டை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், கட்டம்பே ராஜபோவனராம விகாரைக்கும் விஜயம் செய்திருந்த கோத்தபாய ராஜபக்ச, வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், தலைமை விகாரதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார்.

இதன் போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவிற்கு அறிவுரை கூறிய தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இதுவே இறுதி வாய்ப்பு, இந்த வாய்ப்பினை தவறவிடக் கூடாது. இந்த வாய்ப்பை தவறவிட்டால், நாடு மற்றும் நாட்டு மக்கள் என அனைவரின் நிலையும் முடிவுக்கு வந்துவிடும்” என கூறியுள்ளார்.

Latest Offers