மஹிந்த உள்ளிட்ட குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களாக செயற்படுவதற்கான அனுமதி இல்லை என மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தலைமைத்துவத்தை ஏற்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்றுக்கொண்ட உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அறிவித்த பின்னர், தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தால் மஹிந்த உள்ளிட்ட ஏனையவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படும்.

அவசியம் ஏற்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக அவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers