கோத்தாவுக்கு எதிராக பொதுஜன பெரமுனவில் பின்னப்படும் சதி வலை! சிக்குவாரா ஜனாதிபதி வேட்பாளர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாயவை தோற்கடிப்பதற்காக அக்கட்சிக்குள் குழுவொன்று சதி செய்து வருவதாக சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணிக்காக ஒருபோதும் பொதுஜன பெரமுனவிடம் மண்டியிடப்போவதில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காத வகையில் சிலர் செயற்படுகின்றனர்.

நாட்டின் தற்போதைய அரசியலில் உச்சத்தில் இருப்பவர்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் வீழ்ச்சியடைய வேண்டிய நிலை ஏற்படும்.

பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின் போது எமது வேலைத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே கூட்டணியமைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers