இதுவே எனது திட்டம்! பகிரங்கமாக அறிவித்தார் கோத்தா

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தையே நான் அறிவிக்கின்றேன் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராமவிற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அங்கு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச என்னை வேட்பாளராக அறிவித்தபோது நாட்டின் எதிர்காலம் பற்றியும் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கைகளையும் குறிப்பிட்டிருந்தேன்.

அவை அனைத்தும் பிரயோசனமான வேலைத்திட்டங்களாகும். என்னை வரவேற்பதற்கு இங்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers