சஜித்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கியத்துவம்மிக்க நாள் இன்று!

Report Print Murali Murali in அரசியல்
528Shares

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்ற நடைபெறவுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க உட்பட மேலும் சில அரசியல் பிரமுகர்களும் பங்கேற்கவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உதயமாகவுள்ள ‘ஜனநாயக தேசிய முன்னணி’ குறித்து நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் திகதி இதன்போது நிர்ணயிக்கப்படவுள்ளது.

அத்துடன், புதிய கூட்டணிக்கான யாப்பு பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, இது சம்பந்தமாகவும் பரீசிலிக்கப்படவுள்ளது.

அதேவேளை, கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் தினத்தில் ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதால் இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்படும்.

அந்த யோசனை ஐக்கிய தேசியக்கட்சிக்கு அனுப்பட்ட பின்னர் செயற்குழுவையும், நாடாளுமன்றக்குழுவையும் ஒரே நேரத்தில் கூட்டி அங்கீகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.