மீண்டும் தலைதூக்கும் சந்திரிக்கா! திங்கள் தொடக்கம் மற்றுமொரு புது அவதாரம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தனது தந்தையினால் நிறுவப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கையாளப்படுவதாகவும் கட்சியைப் புதுப்பிக்கப் போவதாகவும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குச் சென்று பல்வேறு உயர்மட்ட உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, கட்சியின் தற்போதைய அவலநிலைக்கு, தனக்குப் பின்னர் கட்சியைப் பொறுப்பேற்ற தலைவர்களே காரணம் என்றும் விமர்சித்தார்.

கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தை வரும் திங்கட்கிழமை தொடங்குவதாக அறிவித்த சந்திரிக்கா, தனக்கும் தனது பணியாளர்களுக்கும், சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் உடனடியாக ஒரு தனி செயலகம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

அவரது இந்தக் கோரிக்கை கட்சியின் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் ஒழுக்கத்தை மீறியதற்காக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவையும், சந்திரிக்கா குற்றம்சாட்டியுள்ளார்.

Latest Offers