நான் தான் வேட்பாளர்! இதுவே இறுதி: சஜித் அதிரடி

Report Print Jeslin Jeslin in அரசியல்
2072Shares

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச ஆகிய நான் நிச்சயமாக வேட்பாளராக களமிறங்குவேன் என்பது மட்டும் உறுதியாகும். இது தொடர்பாக இரண்டு பேச்சுக்களுக்கு இனிமேல் இடம்கிடையாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிங்கள, பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்கு தற்போது தேவைப்படுவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவது உறுதி.

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். ஆனால் நான் ஒரு விடயத்தை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதாவது இம்முறை ஜனாதிபதித் தேர்த்லில் சஜித் பிரேமதாச ஆகிய நான் நிச்சயமாக வேட்பாளராக களமிறங்குவேன் என்பது மட்டுமே உறுதி. இது தொடர்பாக இரண்டு பேச்சுக்களுக்கு இனிமேல் இடம் கிடையாது.

இந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து மக்கள் தீர்மானங்களை எடுக்கும்போது சில விடயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். விசேடமாக சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் நிலைமை அச்சுறுத்தல் இன்றி வாழும் சூழ்நிலை என்பன தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்.

மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதோடு, தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.