புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் குழுவின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் பிற்பகல் கொழும்பிலுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இந்த கலந்துரையாடலில் ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், அரசாங்கத்துடன் உள்ள கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளாக அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.