மைத்திரிக்கு மகிந்த அணி வைத்துள்ள செக்

Report Print Jeslin Jeslin in அரசியல்
373Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துக் கொண்டாலும் அந்தக் கூட்டணிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனதான் தலைமைத்தாங்கும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்நதும் அவர் தெரிவிக்கையில்,

ஒருங்கிணைந்த எதிரணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, கூட்டணியின் யாப்பினை ஸ்தாபிப்பது தொடர்பாகவே முதற்கட்டமாக தற்போது ஆராயப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறு கருத்துக்களும் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளோம்.

ஐக்கிய தேசிக் கட்சியின் எதிர்ப்புக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எமது பிரதான நோக்கமாக இருக்கிறது. இந்த பாரிய கூட்டணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை தாங்குவதுதான் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தற்போதைய சூழ்நிலையில், எமது தரப்புக்கே பலம் அதிகமாக உள்ளது. எவ்வாறாயினும் நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் பேச்சுக்களை நடத்தத் தயாராகவே இருக்கிறோம்.

இந்த விடயத்தில் நாம் தெளிவாக இருக்கிறோம். எனினும், இறுதி முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்க்காலத்தில்தான் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.