தெரிவு குழுவை புறக்கணித்த மைத்திரி! - சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் குழு

Report Print Vethu Vethu in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட தெரிவுக்குழுவை புறக்கணித்தால் நாடாளுமன்ற வரப்பிரசாத சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே அதற்கான பதில் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதிக்குள் விருப்பமான நேரத்தை தெரிவு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதியை விசாரணைக்கு அழைப்பதற்கு தெரிவுக் குழுவுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதிமன்றத்தை மீறிச் செல்ல முடியாது. நிறைவேற்று அதிகாரம் கொண்டவரை விசாரணைக்காக நாடாளுமன்றத்திற்கு அழைக்க முடியாது.

அவசியம் ஏற்பட்டால் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியிடம் விசாரணை மேற்கொண்டு அதற்கு பதில் வழங்குவதற்கான சந்தர்ப்பம் தெரிவுக் குழுவுக்கு உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers