ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிடமாக உள்ள உறுப்பினர் பதவியை தனக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவ பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுள்ளார். இதன் காரணமாக அவர் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நீக்குமாறும், அந்தக் கட்சியில் இணைந்த உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குமாறும் கோரிக்கை சந்திரிக்கா விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து ஜனாதிபதி சரியான பதிலை வழங்கவில்லை. எதிர்வரும் நாட்களில் இது குறித்து ஆராய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்நிலைமையை அடுத்து சந்திரிக்கா மற்றும் மைத்திரிக்கு இடையில் நல்லெண்ணத்தை வலுப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது சிறந்ததென ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.