கோத்தபாயவிற்கு வாக்களிக்க வேண்டாம்! சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்
126Shares

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உண்மையான தமிழர்கள் யாரும் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என வட மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தப்போது, கோத்தபாய மீது பல நீதிமன்ற வழக்குகள் உள்ளன. மஹிந்த ராஜபக்‌ஷ அவரை ஏன் பரிந்துரைத்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற நிலைப்பாட்டிலேயே கோத்தபாய இருக்கிறார். இதை உறுதிப்படுத்த அவர் எந்தவொரு வன்முறை செயலையும் செய்வார். அவர் ஜனநாயக ரீதியாக சிந்திக்கும் நபர் அல்ல.

கோட்டாபயாவுக்கு வாக்களிக்குமாறு நான் யாரிடமும் ஒருபோதும் சொல்லவில்லை. தனது நிலைப்பாடு கோத்தபாயவை ஆதரிக்கக்கூடாது என்பதே என்றும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.