கோத்தபாயவிடம் பேசியது இதுதான்! கூட்டமைப்பின் உறுப்பினர் வெளிப்படுத்திய தகவல்

Report Print Murali Murali in அரசியல்
675Shares

தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோத்தபாயவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதியாவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவது அவசியம் என கோத்தபாயவிடம் கூறினேன். அதற்கமைய விரைவில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை சந்திக்க விரும்புவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

மொத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யார் தீர்வை வழங்க போவதாக கூறுகின்றாரோ அவர்களுடனும் பேச்சசுவார்த்தை நடத்த தயார் எனவும் குறிப்பிட்டார்.

வெறுமனே தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பதால் நம்பிக்கையில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேசி பார்த்து முடிவு எடுக்க உள்ளதாகவும் சித்தார்தன் மேலும் கூறியுள்ளார்.