ஜனாதிபதியாக சஜித்! பிரதமராகும் மைத்திரி! திரைமறைவில் நடக்கும் பல நகர்வுகள்

Report Print Vethu Vethu in அரசியல்
617Shares

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் இணைந்து எதிர்கால அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை விரைவில் தீர்த்துக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கக்கப்படவுள்ளார். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தற்போது ஹேமா பிரேமதாஸ மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சஜித்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை செயற்பட வைக்கும் முயற்சியில் அமைச்சர் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளார்.

இதனடிப்படையில் சுதந்திர கட்சியை சேர்ந்த மஹிந்த சமரசிங்க தலைமையினால் குழு ஒன்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு சஜித் எதிர்ப்பு வெளியிடாமல் இருப்பதற்கு மைத்திரி மற்றும் சஜித் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்துள்ளனர்.

இதேவேளை சஜித் ஜனாதிபதியாக தெரிவானால், சுதந்திர கட்சியின் சார்ப்பில் பிரதமர் பதவிக்காக ஜனாதிபதி மைத்திரி போட்டியிடவுள்ளார். அடுத்து வரும் அரசாங்கத்தின் போது இருவரும் இணைந்து செயற்படுவதே நோக்கம் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.