கோத்தபாயவை சிறையில் அடைக்க தீவிர முயற்சி

Report Print Vethu Vethu in அரசியல்
502Shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்ட உத்தியோகபூர்வ இல்லத்தினுள் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் இருவர் மற்றும் அரசாங்கத்தின் உயர் மட்ட அரசியல்வாதிகள் மூவர் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, வசீம் தாஜுடீன் கொலை அல்லது ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் தொட்பில் கடந்த காலங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு சம்பவத்திலேனும் கோத்தபாய ராஜபக்சவை தொடர்புபடுத்தி கைது செய்ய சந்தர்ப்பம் உள்ளதா என அரசியல்வாதிகள் மூவரும் விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

குறித்த சம்பவங்களில் ஏதாவது ஒன்றினை தொடர்புபடுத்தி உட்னடியாக கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசியல்வாதிகள் மூவர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் குறித்த விசாரணை பிரிவு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக இங்கு அரசியல்வாதிகள் மூவர் குற்ற விசாரணை பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரையிலும் வெளிநாடுகள் இரண்டிற்கு செல்ல பொலிஸார் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.