மக்கள் விடுதலை முன்னணியினரின் முன்மாதிரி! மக்களின் ஆதரவு அதிகரிக்கும் சாத்தியம்

Report Print Aasim in அரசியல்

காலி முகத்திடலில் நிரம்பி வழிந்த மக்கள் வெள்ளம் கலைந்து சென்ற பின்னும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியின் முன்மாதிரியான செயற்பாடு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலங்கையின் முன்னணிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத கட்சியொன்றினால் ஒன்றுதிரட்டப்பட்ட ஆகக்கூடிய ஜனத்திரள் நேற்றைய தினம் காலி முகத்திடலில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பொதுச் சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கூட்ட முடிவில் பொதுமக்கள் கலைந்து சென்ற பின்னர் காலிமுகத்திடலை முற்றாக சுத்தப்படுத்தி கையளிக்கும் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களும் களத்தில் இறங்கி காரியமாற்றியுள்ளனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க துடைப்பக்கட்டையுடன் கூட்டிப் பெருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெறத் தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பிக்கான மக்கள் ஆதரவை மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.