அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்டக் கூட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

குளியாப்பிடியவில் நேற்று மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட அமைப்பாளர் நஸீர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பினால் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், கட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி, வாழ்வாதார திட்டங்கள் போன்ற விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

இதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடம் விரிவான விடயங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கட்சியின் செயலாளர் சுபைர்டீன் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஸூபைர்தீன் ஹாஜியார், அமைச்சர் றிசாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் டில்ஷாட், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், குளியாப்பிடிய பிரதேச சபை உப தலைவர் இர்பான், குருணாகல் மாநகர சபை உறுப்பினரும் குருணாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அஸார் தீன், பிரதேச சபை உறுப்பினர்களான அஸ்ஹர், ஷபீர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் குருணாகல் மாவட்ட செயலாளருமான அன்பாஸ் அமால்தீன், கல்வி பொறுப்பாளர் ரியாஸ் அஸ்ஹரி, கொள்கை பரப்பு செயலாளர் இம்ரான் கான், தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை வேட்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.