அரசியலில் பாரிய புரட்சியொன்று செய்யப்பட உள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னமும் 44 நாட்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன பகுதிக்கு இன்று விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் திகதி கூட அறிவிக்கப்படவில்லை. இலங்கையில் தற்பொழுது அதிகளவில் இருப்பது ஜனாதிபதி வேட்பாளர்கள்.
மாகாணசபை தேர்தல்கள் முதலில் நடத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மத்திய மாகாணசபை உரிய மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி ஓராண்டுக்கு மேல் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரண்டு மாகாணசபைகளிலும் இரண்டாண்டு காலமாக மக்கள் பிரதிநிதித்துவம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.