இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா! அமெரிக்கா கடும் அதிருப்தி

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் மீது பாரிய மனித உரிமைகள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நிறுவனங்களும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்தநிலையில் அவர் இலங்கையின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமையானது, சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கையில் நல்லிணக்கம் தேவைப்படுகின்ற நிலையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் அதன் அர்ப்பணிப்பையும் தாழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.