எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் யசூசி அகாசி சந்திப்பு

Report Print Aasim in அரசியல்
75Shares

எதிரக்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜப்பான் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது

விடுதலைப் புலிகளுடனான 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை தொட்டு ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவராக யசூசி அகாசி இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றார்

இந்நிலையில் இம்முறை இலங்கை வந்துள்ள அவர் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஹர்ஷ விஜேவரத்தன ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.