கோத்தபாயவிற்கு வடக்கு, கிழக்கு தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? கருணாவின் கோரிக்கை

Report Print Navoj in அரசியல்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கும், பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிழக்குமாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரக் கோரி மட்டக்களப்பில் இன்றையதினம் எதிர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது.

குறித்த பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் முற்றுமுழுதாக நிறுத்தப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். முஸ்லிம் சட்டம் மற்றும் முஸ்லிம் தத்துவங்களை பல்கலைக் கழகத்தில் வைத்துள்ளதே தவிர இது ஒரு பல்கலைக்கழகம் அல்ல.

இதற்காகவே கிரானின் பேரணியை ஆரம்பித்துள்ளோம். இங்கு பல்லாயிரக் கணக்கில் நிதிகள் மோசடி செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி கூட இதுபற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் மூலம் முஸ்லிம் பயங்கரவாதிகள் எங்களது மக்களை குண்டு போட்டு தகர்த்துள்ளார்கள். நல்லாட்சியை உருவாக்குவோம், மாற்றத்தை கொண்டுவருவோம் என்று கூறிக் கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசு பாரிய தவறுகளை விட்டுள்ளது.

இவர்களை நம்பி தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். இவர்கள் ஒரு விடயத்தையும் கூட நிறைவேற்றவில்லை. மாறாக இலங்கையில் குண்டு தாக்குதலும், படுகொலைகளும் தான் நடந்தேறியுள்ளன.

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளார். கிரான் மண்ணில் இருந்து கூறுகின்றேன். நாங்களை இவரை ஆதரித்து நிற்கின்றோம். எங்களுக்கு வெற்றி நிச்சயம்.

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டு வந்து இந்நாட்டிலுள்ள முஸ்லிம் பயங்கரவாதத்தை நீக்குவதற்கு அத்திவாரம் இட்டுள்ளோம். இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் நாட்டின் பாதுகாப்பு கருதி கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். கடந்த குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தமிழ் மக்கள். இவ்வாறான பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கும், பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கோத்தபாயவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பல வியாக்கியானங்கள் தற்போது எழுந்துள்ளன. கோத்தபாய ராஜபக்ஷவை குற்றவாளி, யுத்தத்தை நடாத்தியவர் என்று கூறிகின்றார்கள். நான் ஒரு கேள்வி கேட்கின்றேன் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் உட்பட மாவை சேனாதிராஜா கூறினார்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள் என்று.

சரத் பொன்சேகா சீருடை தரித்த இராணுவ தளபதிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். அவ்வாறு வாக்களிக்கின்ற போது ஏன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் முக்கிய களமாக மாறியுள்ளது.

தற்போது ஜே.வி.பி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால் எங்களது வெற்றி இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.