வாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

வாக்கெடுப்பு மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு பிரதமரும், கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளக ரீதியில் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி வேட்பாரை தெரியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதமரும், சஜித் பிரேமதாசவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மற்றுமொரு தொகுதி கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு ஆகியனவற்றை ஒன்றாகக் கூட்டி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கட்சியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்னளர்.

55 உறுப்பினர்களும் கையொப்பமிட்டு ஆவணமொன்றையும் இவர்கள் ஒப்படைத்துள்ளனர்.