மக்களை கவர கோத்தபாயவின் புதிய தேர்தல் யுத்தி

Report Print Kamel Kamel in அரசியல்

தமது புகைப்படம் அடங்கிய பதாகைகள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும், தமது உருவப் படத்தைக் கொண்டமைந்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறு அறிவித்துள்ளார்.

தமது தேர்தல் வாக்குறுதியில் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதில்லை என வாக்குறுதி அளித்துள்ள நிலையில் இவ்வாறு பதாகைகள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்துவது கோத்தபாயவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

தேர்தல் வாக்குறுதி அளித்து மறுநாள் முதலே இவ்வாறு பதாகைகள் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டமை மூலம் தமது தேர்தல் வாக்குறுதி மீது மக்களின் நம்பிக்கை இழக்கப்படும் என கோத்தபாய ராஜபக்ச கருதுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில அரசியல்வாதிகள் பாதாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.