இலங்கைக்கான புதிய நோர்வே தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

Report Print Ajith Ajith in அரசியல்
59Shares

இலங்கைக்கான புதிய நோர்வே தூதராக எச். இ.ட்ரைன் ஜெரான்லி எஸ்கெடல் தனது ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று ஜனாதிபதி கையளித்தார்.

இவர் இலங்கைக்கான நோர்வே தூதராக தனது பதவியை ஏற்பதற்கு முன்னர், 2016 முதல் 2019 வரை ஒஸ்லோவில் உள்ள நோர்வே நாடாளுமன்றத்தின் சர்வதேச துறைக்கான பிரிவுத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே வெளியுறவு அமைச்சகத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது பணி, மணிலா, பாரிஸ் மற்றும் கார்ட்டூம் உள்ள நோர்வே தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.