தமிழ் தேசிய கூட்டமைப்பை பல தடவைகள் ஏமாற்றிய மகிந்த ராஜபக்ஸ

Report Print Kumar in அரசியல்

மகிந்த ராஜபக்ஸ 19 தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி தங்களை ஏமாற்றியதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ஸ காலத்திற்கு காலம் மாறிமாறி பேசுவதாகவும் இரட்டை வேடம் போடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இது வரையில் எந்த கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவில்லையெனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

வாகரை பகுதியில் ஏதாவது ஊழல்கள் நடைபெற்றால் அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.