எங்களால் முடியும்: ரணிலின் கோரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் என்றும் அதற்காக மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் 2019 ஆம் ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய தேசிய கட்சியால் வெற்றி கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று எதிர்கால திட்டங்கள் மற்றும் இது வரையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்துகின்றோம்.

அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொண்டு ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம்.

எனவே மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.