அமைச்சர் சம்பிக்கவின் எதிர்பார்ப்பு!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

புதிய கூட்டணி இம்மாதம் இறுதிக்குள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவரது அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிரவுள்ளவர்களை ஆட்சி பீடத்துக்குக் கொண்டுவருவதற்கான பரந்த கூட்டமைப்பை உருவாக்குவதே தனது ஒரே எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை, புதிய கூட்டணி இம்மாதம் இறுதிக்குள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.