எதிர்வரும் தேர்தல்கள் சிறுபான்மையினரின் சக்தி! அப்துல்லா மஹரூப்

Report Print Gokulan Gokulan in அரசியல்

சிறுபான்மை சமூகம் தீர்மானிக்கின்ற சக்தியாக எதிர்வரும் தேர்தல்கள் இருக்க வேண்டும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்பவை சிறுபான்மை வாக்குகள் மூலமே அரசாங்கத்துக்கு சரியான முடிவுகளை வழங்குகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் நாம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாத்து அரவணைக்கக் கூடிய எமது இருப்பை உறுதிபடுத்தக்கூடியவர்களுக்கு பின்னால்தான் நிற்க வேண்டும்.

இதற்காக அமைச்சர் றிசாட் பதியுதீன் கிண்ணியாவில் அண்மையில் பங்கேற்ற மாபெரும் கூட்டத்தில் உள்ள ஜனநெருக்கம் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்றோர்களுக்கு காட்டுவதற்காகவே கூட்டம் இடம்பெற்றது.

முஸ்லிம்கள் யார் பின்னால் நிற்கிறார்கள். தேர்தலிலும் யார் பின்னால் நிற்பார்கள் என்பதை இதில் இருந்து உணர்ந்து கொள்ள முடியும்.

இனவாதங்களை கக்கி வாக்குகளை தேட முயற்சிப்பது தோல்வியில் முடிவடையும். மஹிந்த அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்ட போதும் ஏன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என்பதை இந்த நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது.

இனவாதத்தை விதைத்ததால் தான் இதற்கான தகுந்த பாடத்தை மக்கள் அதாவது முஸ்லிம் சமூகம் கற்றுக் கொடுத்துள்ளது.

நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களை சிறுபான்மை சமூகமே தீர்மானிக்கும். அமைச்சர் றிசாட் கை நீட்டுகின்ற வேட்பாளருக்கே இம்முறை ஆதரவு வழங்கப்படும்.

முஸ்லிம்களுக்கான பிரச்சினைகள், சோதனைகள் எங்கு இடம் பெற்றாலும் அதற்காக நானும் எமது தலைமையின் குரலும் உயர்த்தப்படும்.

இதற்காக நாம் அனைவரும் ஓரணியில் நின்று ஒருமித்து செயற்பட வேண்டும். மொட்டு,கதிரை என்ற கட்சி பாகுபாடின்றி உரிமைகளுக்காக நிம்மதியாக மாவட்ட, தேசிய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக செயற்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இதனை வெற்றி கொள்ள வருகின்ற தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைய நம் அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை இதற்காக ஒன்றாக கூட்டிணைந்து செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.