சர்வதேச உதவிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய அதிகாரியின் நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

இராணுவ தளபதியாக லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை சரியான தருணமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி திருத்திக்கொள்வார் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ரீதியில் கடனுதவிகள் கிடைப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டமை, ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை போன்ற சர்வதேச நிவாரணங்களில் இந்த தீர்மானம் பெரிய பாதிப்பாக அமையும் எனவும் சந்திம கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

சவேந்திர சில்வா தவிர இராணுவ தளபதியாக நியமிக்கக் கூடிய தகுதியானவர்கள் இருப்பதாகவும் இதனால், ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றுவார் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் ஊடக சந்திப்பொன்றில் மேலும் தெரிவித்துள்ளளார்.

Latest Offers