கோத்தாவின் மீதான இராணுவ கண்ணோட்டம்! பின்புலத்தை உணராத பொன்சேகா

Report Print Thileepan Thileepan in அரசியல்

சரத்பொன்சேகா கோத்தபாய ராஜபக்சவினை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமையை வரவேற்றுள்ளார். இதை ஒரு இராணுவ ரீதியான கண்டோட்டமாகவே பார்க்கின்றேன். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்தும் இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்கின்றார். அதன் பின்புலத்தை அவர் உணரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அடக்குமுறையை திணிக்காத ஒரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்.

அண்மையில் சரத்பொன்சேகா கோத்தபாய ராஜபக்சவினை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமையை வரவேற்றுள்ளார். இதை ஒரு இராணுவ ரீதியான கண்டோட்டமாகவே பார்க்கின்றேன்.

அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்தும் இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்கின்றார். அதன் பின்புலத்தை அவர் உணரவில்லை.

நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் பற்றி பேச வேண்டியவர்கள் அனைத்தையும் கைவிட்டு சோமாலியா, தென்சூடான் போன்ற நாடுகளைப் போல் இந்த நாட்டை மாற்ற முயல்கின்றார்கள். இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு என்ற வகையில் இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழர் விரோத செயற்பாடுகளாகவே அமையும் என உணர முடிகின்றது.

தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் நகர தயாராகவில்லை.

வறிய நாடான சிங்கப்பூர் இன்று பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட்டமையே அதற்கு காரணம்.

எனவே, இலங்கையிலும் அனைத்து இன, மத மக்களுக்கும் சமத்துவம் வழங்கி இன்னொரு அடக்குமுறையை திணிக்காத ஒரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.