மீண்டும் தீட்டப்படும் சதித்திட்டம்! மைத்திரியின் வலையில் சிக்கப்போகும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர் யார்..?

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்சவை திருட்டு வழியில் பிரதமராக நியமித்தது போல், மீண்டும் அப்படியான சதித்திட்டத்தை மேற்கொள்ள இரவு நேரங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தவறியேனும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியின் சதித்திட்டத்தில் சிக்கினால், அத்துடன் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சதித்திட்ட பேச்சுவார்த்தை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும்.

இதனால், அவர்களின் பெயர்களை வெளியிடப் போவதில்லை எனவும் ஆசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.