கொலைகாரனுக்கு மகுடம் சூட்டிய மைத்திரி! முன்னாள் போராளி கடும் சீற்றம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

சவேந்திர சில்வாவின் நியமனம் கொலைகாரனுக்கு மகுடம் சூட்டுவதாகவே பார்க்க முடியும் என அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்துள்ளார்.

காரைதீவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஓரிரு தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்து இருக்கின்றார். உண்மையிலேயே இந்த நாட்டில் எல்லா மதங்களும் எல்லா இனங்களும் ஒன்று ஒருமித்த நாடு என்று கூறிக் கொண்டிருக்கின்றன.

சிங்கள பேரினவாத அரசுகள் உண்மையில் தமிழினத்தை அழித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதும் தமிழினத்தை கொன்று குவித்தவர்களுக்கு பதவிப்பிரமாணங்கள் கொடுத்துக் கொண்டிருப்பதை எவ்வாறு எம்மால் பார்க்க முடிகின்றது.

தமிழினத்தை அழித்தவனுக்கு இந்த நாட்டிற்குள் நாங்கள் பதவிகளை வழங்குவோம் என்று சொல்லாமல் சொல்கின்றது இந்த சிங்கள பேரினவாத அரசு என்பதை வெளிப்படையாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

தயவுகூர்ந்து இந்த விடயம் சார்ந்து உலகளாவிய ரீதியில் இருக்கின்ற ஏனைய நாடுகள் மற்றும் மனித உரிமை ஆணையங்கள் இதில் தலையிடவேண்டும்.

தமிழினத்தை கொலை செய்பவர்களுக்கு இங்கே பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றது அன்றி அவர்களுக்கான தண்டனைகள் அல்லது அவர்களுக்கான விசாரணைகள் கூட எடுக்கப்படாமல் தமிழினத்தை அழிப்பவர்களை அவர்களை தோள்தட்டும் விதமாகவே இந்த அரசுகள் செயற்படுகின்றன என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

முன்னாள் போராளிகள் சார்பாக மிகப்பெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்கக்கூடாது என்றும் தயவுகூர்ந்து ஐக்கிய நாடுகள் இது போன்ற விடயங்களை கண்காணிக்க வேண்டும் ஐக்கிய நாடுகளின் பார்வை இந்த விடயங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.