இறுதி தீர்மானத்தை விரைவாக எடுக்க வேண்டும்! ரணிலிடம் கோர முடிவு

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு தகுந்த வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச எனவும் இது சம்பந்தமாக கட்சியின் தலைவருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் ஜனநாயகமான கட்சி என்பதால், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இணங்க வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதா இல்லை என்பது குறித்தும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆகையினால், பிரதமரின் நிலைப்பாட்டை துரிதமாக எதிர்பார்ப்பதாகவும் ஹர்சன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சியில் மோதல்கள், நெருக்கடிகள் ஏற்படும் முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் கூட்டணியை அமைப்பது சம்பந்தமாக இறுதி தீர்மானத்தை மிக விரைவாக எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று மணி நேரத்திற்குள் மேல் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.