கல்வி அமைச்சரின் புதிய கல்விக் கொள்கை! பிரமிப்பில் மக்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

வருமான வரி செலுத்தும் பெற்றோர்களின் குழந்தைகளை தேசிய பாடசாலைகளில் அனுமதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் தேசிய வருமானத்தை அதிகரிக்க அரசாங்கத்திற்கு உதவுவதால் வருமான வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் முகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் தரம் ஒன்றுக்கு குழந்தைகளை அனுமதிப்பதற்கு தேவையான அளவுகோல்கள் எதிர்காலத்தில் உள்நாட்டு வருவாய் துறையின் உதவியுடன் செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.