மூன்று அணியாக உடையும் ஐக்கிய தேசிய கட்சி! பதவி விலகும் சபாநாயகர்?

Report Print Vethu Vethu in அரசியல்

சபாநாயகர் பதவியிலிருந்து கருஜயசூரிய பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அவர் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தத் தகவலை வெளியிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி அறிவிக்கப்பட்டதும் அவர் சபாநாயகர் பதவியிலிருந்து கருஜயசூரிய விலகலாம்.

ஐக்கிய தேசிய கட்சி, மூன்று அணிகளாக பிளவடைவதை ஒருபோதும் தடுக்க முடியாது போகும். சஜித் அணி , ரணில் அணி மற்றும் கோத்தபாயவுடன் இணையும் அணியென மூன்று அணிகளாக அந்த கட்சி பிளவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...