ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள பெண் போட்டியாளர்..?

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சொலிசுட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க போட்டியிட உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அவர் சொலிசுட்டர் ஜெனரல் பதவியிலிருந்து கடந்த 19ஆம் திகதி விலகிக் கொண்டுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவராக தில்ருக்ஷி கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பாரியளவிலான ஊழல் மோசடிச் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் மோட்டார் வாகன உதிரிப்பாக கொள்வனவு குறித்த மோசடி சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் தில்ருக்ஷியின் பங்களிப்பு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவில் சமூக அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்து அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers