மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இது தொடர்பில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழிகாட்டல்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளும் எண்ணத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருப்பதாகவும் அவை குறித்தும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.