மலையக மக்களுக்காக ஐநாவில் குரல் கொடுக்கவுள்ள அனந்தி

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்ரீ லங்கா தமிழர் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சேர்ந்து இயங்குவதற்கு ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவிதத்துள்ளார்.

மலையக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்திற்கும் இடையில் இன்று காலை நீண்ட நேர சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவந்த நான் இனிவரும் காலங்களில் மலையக மக்களுக்காக ஐநாவில் குரல் கொடுக்க தீர்மானித்துள்ளேன்.

இதற்காக நான் மலையகத்தை சேர்ந்த மலையக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கொள்கை அடிப்படையில் சேர்ந்து பயணிக்க தீர்மானித்துள்ளேன். இதன் ஊடாக மலையக மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஐ.நாவில் மலையக மக்கள் சார்பில் பேசவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...