கோத்தபாயவை விட எனக்கு தகுதியுள்ளது! ஹேசா விதானகே

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள கோத்தபாய ராஜபக்சவை விட தனக்கு தகுதிகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

நாடு கோருவது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நபரை அல்ல. நான் படிப்படியாக அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்திற்கு வந்தவன். இதனால், எனக்கு இருக்கும் தகுதி கோத்தபாய ராஜபக்சவுக்கு இல்லை.

வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் மீண்டும் அதனை செய்ய மாட்டார்கள் என்று கூற முடியாது.

இராணுவ அதிகாரியான கோத்தபாய ராஜபக்சவை விட தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக சரத் பொன்சேகாவுக்கு அனுபவம் உள்ளது எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers