எமது ஆட்சியில் தாக்குதலில் தொடர்புள்ளவர்களுக்கு தண்டனை நிச்சயம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளின் முடிவுகளை வழங்கவில்லை என்றால், பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தி நிச்சயம் உரிய தண்டனையை வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு கேலிக்குரியது. அது குற்றவாளிகளை நிரபராதிகளாக மாற்றுகிறது. நிரபராதிகளை குற்றவாளிகளாக மாற்றுகிறது.

இதனால், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவுகள் சரியான முடிவுகளாக இருக்காது.

தமது தவறுகளை மறைப்பதை மாத்திரமே தெரிவுக்குழு செய்யும் எனவும் சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers