ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க நான் தயார்! ரணில் விசேட அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து தாருங்கள். அதன் பின்னர் நான் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு தயாராக இருக்கின்றேன். அதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான யாப்பு குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிக்கின்றது.

எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை உருவாக்கிதாருங்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு முன்னர் குறைந்தப்பட்சம் கூட்டணிக்கான யாப்பு தனக்கு கிடைக்கப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...